விஷம் குடித்து விவசாயி தற்கொலை

திண்டிவனம் பகுதியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Update: 2022-11-10 18:45 GMT

திண்டிவனம்

திண்டிவனம் அருகே உள்ள குண்ணப்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலு(வயது 60). விவசாயியான இவர் சம்பவத்தன்று வீட்டின் அருகே கொட்டகையில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலு பரிதாபமாக இறந்தார். வயிற்றிவலி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்