விஷம் குடித்து விவசாயி தற்கொலை

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-09-02 18:02 GMT


பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 50). விவசாயி. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்த களை கொல்லி மருந்தை (விஷம்) குடி போதையில் எடுத்து குடித்து விட்டார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் சேகரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேகர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்