கபிஸ்தலம்
கபிஸ்தலம் அருகே உள்ள நக்கம்பாடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன்(வயது46). விவசாயி. இவரது மனைவி ஜெயபாரதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவருக்கு நீண்ட நாளாக கடன் தொல்லை இருந்து வந்தது. செந்தில்நாதன் மனைவி அரியலூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த 23-ந்தேதி திருமண்டங்குடி மதுகடையில் மதுஅருந்த சென்ற போது அங்குள்ள ஒருவருக்கும், செந்தில்நாதனுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சலில் இருந்த செந்தில்நாதன் விஷத்தை குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார். இதுகுறித்து செந்தில்நாதன் உறவினர் முருகானந்தம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் பகவதி சரணம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பு நம்பியார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.