விஷம் குடித்து விவசாயி தற்கொலை
திருக்கோவிலூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை போலீசார் விசாரணை
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள அம்மன் கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் அம்மாசி மகன் பாவாடை(வயது 33). விவசாயியான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 ஆண் மற்றும் ஒரு பெண் என 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் பாவாடை நேற்று காலை அவரது நிலத்தில் குவளை கொட்டை எனப்படும் விஷ விதையை அரைத்துக் குடித்தார். சற்று நேரத்தில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாவாடை பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்து அவரது மனைவி சத்யா(30) கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து பாவாடையின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.