விஷம் குடித்து விவசாயி தற்கொலை
சேத்துப்பட்டு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
சேத்துப்பட்டு அருகே உள்ள கோழிப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 45). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.
பல்வேறு இடங்களில் டாக்டர்களை சந்தித்து சிகிச்சை பெற்றும்குணமாகாததால் விரக்தியடைந்த அவர் விஷத்தை குடித்து விட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தங்கராஜ் இறந்துவிட்டார்.
இது குறித்து தேசூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், கந்தசாமி வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.