விஷம் குடித்து விவசாயி தற்கொலை

சுல்தான்பேட்டை அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-14 19:30 GMT

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியம் மேட்டுலட்சுமி நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 41) விவசாயி. இவர் கடந்த சில ஆண்டுகளாக மதுகுடிக்கும் பழகத்திற்கு அடிமையாகி இருநதார். இந்த நிலையில், நேற்று அதிகாலை கனகராஜ் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனைகண்ட அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, செஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு முதலுதவிக்கு பின், மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்