விஷம் குடித்து விவசாயி தற்கொலை

ராமநாதபுரம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-13 18:45 GMT

ராமநாதபுரம் அருகே உள்ள முனியன்வலசையை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 55). இவருக்கு திருமணமாகி லட்சுமி (52) என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். 2 மகன்களுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ள நிலையில் தங்கராஜ் விவசாய கூலி வேலை பார்த்து கொண்டு ஆடு மேய்த்து வந்துள்ளார். அதிக குடிப்பழக்கம் காரணமாக வயிற்கு வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த தங்கராஜ் வாழ்வதை விட சாவதே மேல் என்று அடிக்கடி கூறி வந்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் லட்சுமி 100 நாள் வேலைக்கு சென்று விட்டாராம். இளையமகன் இளங்கேஸ்வரன் வேலை முடித்து வந்து விட்டு தந்தையை பார்ப்பதற்காக அருகில் உள்ள தோப்பிற்கு சென்றார்.

அங்கு தங்கராஜ் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகில் சென்று பார்த்தபோது மதுவில் விஷம் கலந்து குடித்திருந்தது தெரிந்தது. உடனடியாக தன் அம்மாவிற்கு தகவல் தெரிவித்த இளங்கேஸ்வரன் ஆட்டோவில் தந்தையை ஏற்றி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தங்கராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரின் மனைவி லட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்