விவசாயி போக்சோ சட்டத்தில் கைது

விவசாயி போக்சோ சட்டத்தில் கைது

Update: 2022-07-27 20:12 GMT

வல்லம்

தஞ்சையை அடுத்துள்ள ஒரு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்ததாக தெரிகிறது. தஞ்சை அருகே உள்ள காசவளநாடு தெக்கூரை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் என்பவருக்கும், 17 வயது சிறுமிக்கும், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சிறிது நாட்களிலேயே சிறுமியின் கழுத்தில் கட்டியிருந்த தாலியை ஆறுமுகம் வாங்கிக்கொண்டு சிறுமியை அவருடைய வீட்டிற்கு அனுப்பி உள்ளார். இதையடுத்து சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அப்போது சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் சிறுமியை திருமணம் செய்த ஆறுமுகம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்