குடும்பத்தகராறில் மனைவியின் தம்பியை தாக்கிய விவசாயி கைது

குடும்பத்தகராறில் மனைவியின் தம்பியை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-08-15 18:53 GMT

குடும்பத்தகராறு

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சுந்தரேசபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மகன் அரவிந்த் (வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (28), விவசாயி. இவர்கள் 2 பேரும் உறவினர்கள் ஆவர். இந்தநிலையில் அரவிந்த்தின் அக்காள் அனிதாவை ஆனந்தகுமார் திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையே குடும்பத்தகராறு காரணமாக கடந்த சில நாட்களாக அரவிந்தன் வீட்டில் அனிதா இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தனது மனைவி அனிதாவை தனது வீட்டிற்கு வருமாறு ஆனந்தகுமார் அழைத்துள்ளார். அப்போது அனிதா வர முடியாது என்று தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தகுமார் தனது மனைவி அனிதாவை சரமாரியாக தாக்கி உள்ளார்.

கைது

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அரவிந்த், ஆனந்தகுமாரை தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தகுமார் அரவிந்தை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அரவிந்த்தை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து அரவிந்த் அளித்த புகாரின் பேரில் விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து ஆனந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்