விவசாயி கைது

சங்கரன்கோவிலில் மின்வாரிய ஊழியரை அவதூறாக பேசியதாக விவசாயி கைது

Update: 2022-07-28 16:01 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருபவர் நாராயண பெருமாள் மகன் ராஜலிங்கம் (வயது 57).

சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குருசாமி மகன் பரமசிவம் (47). விவசாயி.

பரமசிவம் தனது கிணற்றில் விவசாய மின் இணைப்பு வேண்டி சங்கரன்கோவிலில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார். இதனை மின்வாரிய ஊழியர் ராஜலிங்கம் அளவீடு செய்து வந்துள்ளார். மின் இணைப்பு கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மின்வாரிய ஊழியர் ராஜலிங்கம் தனது அலுவலகத்தில் இருந்தபோது நேற்று மதியம் அங்கு வந்த விவசாயி பரமசிவம், ராஜலிங்கத்தை அவதூறாக பேசினாராம்.

இது குறித்து ராஜலிங்கம் சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பரமசிவத்தை கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்