விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி

விவசாயிகளுக்கு பண்ணை பள்ளி பயிற்சி நடந்தது.

Update: 2022-12-10 17:14 GMT

நயினார்கோவில், 

நயினார்கோவில் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நஞ்சில்லா விவசாயம் கற்றுத்தரும் பண்ணை பள்ளிகள் பயிற்சி தொடக்க விழா சிரகிக்கோட்டை கிராமத்தில் நடைபெற்றது. சிரகிக்கோட்டை கிராமத்தில் பண்ணை பள்ளி வகுப்புகள் ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். வேளாண்மை துணை இயக்குனர் பாஸ்கர மணியன், வேளாண்மை உதவி இயக்குனர்கள் பானுபிரகாஷ், நாகராஜன், துணை வேளாண்மை அலுவலர் அண்ணாதுரை, கலைஞர் திட்ட பொறுப்பு அலுவலர் நவீன்ராஜா, உதவி தொழில் நுட்ப அலுவலர் இளையராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்