பிரபல ரவுடி தற்கொலை

பிரபல ரவுடி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-01-23 19:00 GMT

பெரம்பலூர் எடத்தெருவை சேர்ந்தவர் முருகேசன் என்கிற முட்டை முருகேசன் (வயது 40). பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது முருகேசன் நன்னடத்தை பிணையில் வெளியே இருந்து வந்தார். இந்த நிலையில் முருகேசன் நேற்று மாலை பெரம்பலூர் இந்திரா நகரில் உள்ள உறவினர் செல்வகுமார் என்பவர் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முருகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகேசன் தொடர்புடைய பாண்டி என்கிற வல்லத்தரசு கொலை வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்