பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த நாய்களுக்கு கருத்தடை

சீர்காழியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரிந்த நாய்களுக்கு கருத்தடை அறுவடை சிகிச்சை செய்யப்பட்டது.

Update: 2022-05-31 15:50 GMT

சீர்கழி:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த நாய்களை பிடிக்க வேண்டும் என நகரசபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து நகரசபை தலைவர் துர்கா ராஜசேகரன் 'பப்ளிக் பார் அனிமல்' என்ற அமைப்பை தொடர்பு கொண்டு சீர்காழி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க கேட்டுக்கொண்டார். அதன்படி அந்த அமைப்பை சேர்ந்த பணியாளர்கள் சீர்காழி நகரில் சுற்றித்திரிந்த 35-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து மயிலாடுதுறைக்கு வேனில் கொண்டு சென்றனர். அங்கு அனைத்து நாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின்னர் நாய்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 

Tags:    

மேலும் செய்திகள்