தோரணமலையில் குடும்ப விழா

கடையம் அருகே தோரணமலையில் தாத்தா, பேரன், பேத்திகள் என குடும்பத்தினர் கலந்து கொண்ட விழா நடத்தப்பட்டது.;

Update: 2023-05-15 18:45 GMT

கடையம்:

தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில், தோரணமலை பக்தர் குழு சார்பில் கோடை விடுமுறையில் ஞாயிறுதோறும் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த வாரம் பாரம்பரிய விளையாட்டு விழா நடைபெற்றது. நேற்று முன்தினம் தாத்தா, பேரன், பேத்திகள் என குடும்பத்துடன் கலந்து கொண்டு கலந்துரையாடல் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

தொடர்ந்து போட்டிகளில் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நீதிபதி சிவாஜி செல்லையா, திரைப்பட இயக்குனர் கலிவரத கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு அறிவுரைகளை வழங்கினர். மேலும் கோவிலுக்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் செய்திருந்தார்.


Tags:    

மேலும் செய்திகள்