குடும்ப அட்டை குறைதீர்க்கும் முகாம்
குடும்ப அட்டை குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
குளித்தலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் குடும்ப அட்டை தொடர்பான குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு குளித்தலை வட்ட வழங்கல் அலுவலர் நீதிராஜன் தலைமை தாங்கினார். வட்டாட்சியர் கலியமூர்த்தி பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றார். மண்டல துணை வட்டாட்சியர் கலியபெருமாள் முன்னிலை வைத்தார். முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், நகல் அட்டை பெறுதல், முகவரி மாற்றம் உள்பட பல்வேறு தேவைகள் குறித்து பொதுமக்கள் தங்கள் விண்ணப்பங்களை வழங்கி சென்றனர்.