தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு சேதமடைந்த பயிர்களுடன் மனு கொடுக்க வந்த குடும்பத்தினர்

Update: 2022-11-28 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் பூகானஅள்ளி அருகே உள்ள எர்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி வேங்கன் தனது குடும்பத்துடன் தண்ணீரால் சேதமடைந்த பயிர்களை கையில் பிடித்தபடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இதை தொடர்ந்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எங்களது ஊரிலுள்ள எர்ரப்பட்டி ஏரி சமீபத்தில் நிரம்பியது. இதனால் உபரி நீரானது எங்களுக்கு சொந்தமான வயல் வெளிக்குள் புகுந்ததால், அங்கு தண்ணீர் தேங்கியது. இதன் காரணமாக பருத்தி, நெல் உள்ளிட்ட பயிர்கள் அழுகி வருகிறது. மேலும் எங்களை போன்று மற்ற விவசாயிகளும் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்