மெட்ரி அருவிக்கு14-ந் தேதி மரபு நடைபயணம்

Update:2023-05-11 23:55 IST

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- காணத்தக்க கிருஷ்ணகிரி என்ற விழிப்புணர்வு சுற்றுலா திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு வரலாற்று சின்னங்கள், கலாசார பெருமை கொண்ட இடங்கள், சுற்றுலா தலங்கள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அனைவரும் அறிந்து கொள்ளவும், அவற்றை பாதுகாக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் இந்த திட்டத்தை கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது.

அதைத் தொடர்ந்து 14-ந் தேதி காலை 6.30 மணிக்கு அஞ்செட்டி அருகே உள்ள மெட்ரி அருவிக்கு, மரபு நடைப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மாவட்ட கலெக்டர், உயர் அலுவலர்கள், வரலாற்று ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ள பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்