தரிசுநில மேம்பாடு திட்டத்தை வேளாண்மை துறை இயக்குனர் ஆய்வு
பல்லவராயன்குளம் கிராமத்தில் தரிசுநில மேம்பாடு திட்டத்தை வேளாண்மை துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த பல்லவராயன் குளம் கிராமத்தில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் தரிசு நில மேம்படும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் நேரில் சென்று 35 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுத்தப்படும் தரிசு நில மேம்பாடு திட்டம் மேலும் ஆழ்துளை கிணறு அமைக்கும் இடத்தையும் பார்வையிட்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடினர்.
வேளாண்மை இணை இயக்குனர் வடமலை, வேளாண்மை பொறியியல் துறை ஸ்ரீதர், வேளாண்மை உதவி இயக்குனர் ராமன், வேளாண்மை அலுவலர்கள் திலகவதி, பாபு, ஊராட்சி மன்ற தலைவர் ராமநாதன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் ஞானசேகரன், விவசாயிகள் கலந்து கொண்டனர்.