நொய்யல் பகுதியில் பூக்கள் விலை வீழ்ச்சி
நொய்யல் பகுதியில் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் குண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். பூக்கள் விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று பூக்களை விற்பனை செய்து வருகின்றனர். திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறாததால் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதன்படி கடந்த வாரம் குண்டு மல்லி கிலோ ரூ.800-க்கு விற்றது தற்போது ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.100-க்கு விற்றது ரூ.50-க்கும், அரளி ரூ.150-க்கு விற்றது ரூ.80-க்கும், ரோஜா ரூ.250-பக்கு விற்றது ரூ.150-க்கும், முல்லைப் பூ ரூ.700-க்கு விற்றது ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.280-க்கு விற்றது ரூ.100-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கு விற்றது ரூ.450-க்கும் விற்பனையானது.