சூளகிரி மார்க்கெட்டுக்குவரத்து அதிகரிப்பால் புதினா விலை கடும் வீழ்ச்சிதோட்டத்தில் மாடுகளை விட்டு மேய்க்கும் விவசாயிகள்

Update: 2023-09-12 19:45 GMT

சூளகிரி

சூளகிரி, புலியரசி, மருதாண்டபள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொத்தமல்லி, புதினா மற்றும் கீரை வகைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து சூளகிரியில் உள்ள மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இவை மூட்டை, மூட்டையாக லாரிகளில் ஏற்றி, பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பால் தற்போது புதினா விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 1 மாதம், 100 கட்டுகள் கொண்ட ஒரு மூட்டை புதினா ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது விலை வீழ்ச்சியால் ஒரு மூட்டை ரூ.150-க்கு விற்கப்படுகிறது. இதனால் கவலை அடைந்த விவசாயிகள் தோட்டங்களில் புதினாவை அறுக்காமல் கால்நடைகளை விட்டு மேய்த்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்