வெற்றிலை விலை வீழ்ச்சி

வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

Update: 2023-10-04 18:04 GMT

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வெள்ளைக்கொடி வெற்றிலை, கற்பூரி வெற்றிலை போன்ற வெற்றிலைகளை பயிர் செய்துள்ளனர். வெற்றிலை நன்கு விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், தனியார் மற்றும் வெற்றிலை அசோசியேசன் வெற்றிலை மண்டிகளுக்கும், தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.9 ஆயிரத்துக்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், வெள்ளைக் கொடி வெற்றிலை முதியம் சுமை ஒன்று ரூ.5 ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் ரூ.3,500-க்கும் வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். தற்போது கோவில் மற்றும் திருமண விசேஷங்கள் இல்லாததால் வெற்றிலை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன்படி நேற்று முன்தினம் வெள்ளைக்கொடி வெற்றிலை இளம்பயிர் 104 கவுளி கொண்ட சுமை ஒன்று ரூ.6ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை இளம்பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயிரத்துக்கும், வெள்ளைக்கொடி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ.3ஆயிரத்திற்கும், கற்பூரி வெற்றிலை முதியம் பயிர் சுமை ஒன்று ரூ. 1,500-க்கும் விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்