சாத்தான்குளத்தில்போலி பதிவுஎண் கார் பறிமுதல்

சாத்தான்குளத்தில்போலி பதிவுஎண் காரை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.;

Update: 2023-01-04 18:45 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் முஸ்லிம் மேலத்தெருவை சேர்ந்தவர் கா. ஜமாலுதீன் (வயது 50).சொந்தமாக ஆட்டோ வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான கார், போலியான பதிவு எண்ணுடன் சாத்தான்குளம் பகுதியில் இயக்ககப்பட்டு வந்துள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் நடத்திய விசாரணையில், ஜமாலுதீன், தனது காருக்கு போலி யான பதிவு எண் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஜமாலுதீனுக்கு சொந்தமான காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அவர்மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்