நெல்லை அருகே உள்ள தாழையூத்து, உக்கிரன்நகரை சேர்ந்தவர் பாதாளமுத்து (வயது 38). இவர் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தொடர்ந்து ஒரு நிறுவனத்தின் பெயரில் போலியான ரசீது தயார் செய்து போக்குவரத்துக்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து பாதாளமுத்துவை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து போலி ரசீது தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கணினி மற்றும் 44 போலி ரசீதுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.