கத்தியை காட்டி பணம் பறித்த போலி போலீஸ் கைது
கத்தியை காட்டி பணம் பறித்த போலி போலீஸ் கைது செய்யப்பட்டார்.;
முசிறி:
முசிறி அருகே உள்ள வடக்கு ஐத்தாம்பட்டி புதுப்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 42). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சித்தூர் வடக்கு காலனியை சேர்ந்த பிரேம்குமார் (29) என்பவர் தான் போலீஸ் என கூறி, பெரியசாமியை கத்தியை காட்டி மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.ஆயிரத்தை பறித்தார். இதுகுறித்து பெரியசாமி கொடுத்த புகாரின்பேரில், முசிறி போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், பணம் பறித்த பிரேம்குமார் போலி போலீஸ் என்பது தெரியவந்தது. இதையடுத்து பிரேம்குமாரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.