சேலம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (வயது 41). இவர் மருந்தாளுனர் படித்து விட்டு மருந்து கடை வைத்து நடத்தி வருகிறார். டாக்டருக்கு படித்தது போன்று பலருக்கு மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வீராணம் போலீசார் மற்றும் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், நோயாளிகள் சிலருக்கு டாக்டர் போன்று ஊசி போட்டு சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் பரமேஸ்வரனை கைது செய்தனர்.