போலி டாக்டர் கைது

Update: 2023-05-23 19:30 GMT

குருபரப்பள்ளி:-

கிருஷ்ணகிரி அருகே மிட்டஅள்ளி புதூரை சேர்ந்தவர் சிவராஜன் (வயது32). இவர் குந்தாரப்பள்ளி ஜங்ஷன் ரோட்டில் மருந்து கடை நடத்தி வருகிறார். அங்கு மருத்துவம் படிக்காமல் அவர் கிளினிக் நடத்தி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. டாக்டர் சண்முகவேல் தலைமையிலான மருத்துவ குழுவினர் அந்த மருந்து கடையில் சோதனை செய்தனர். அதில் சிவராஜன் முறையாக மருத்துவ படிப்பு படிக்காமல் வைத்தியம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவராஜனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்