போலி டாக்டர் கைது

கொடைரோட்டில் போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-04-11 19:00 GMT

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 57). இவர், கொடைரோட்டில் சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். இங்கு அலோபதி மருத்துவ சிகிச்சை அளிப்பதாக, அம்மையநாயக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புகார் வந்தது.

அதன்பேரில் நிலக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வினோத் தலைமையில் குழுவினர், கொடைரோட்டில் உள்ள சித்த மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அலோபதி மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான மருந்துகள், மாத்திரைகள், பயன்படுத்தாத ஊசிகள் ஆகியவை இருந்தது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வினோத் புகார் கொடுத்தார். அதில் கனகராஜ், சித்த மருத்துவ சிகிச்சைக்கு உரிய அனுமதி இல்லாமலும், அலோபதி மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்ததாகவும் கூறியிருந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்