திண்டிவனம்,
திண்டிவனம் அருகே வெள்ளிமேடுபேட்டை நயினார் தெருவில் ஒருவர் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மேற்பார்வையில் வெள்ளிமேடுபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய உதவி மருத்துவ அலுவலர் இந்துமதி, வெள்ளிமேடுபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நயினார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு கீழ்மாவிலங்கை தேரடி தெருவை சேர்ந்த குணபூஷ்ணன் (வயது 61) என்பவர் மருத்துவம் படிக்காமல் அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.