போலி டாக்டர் கைது

வாணியம்பாடி அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-11 16:14 GMT

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டத்தில் போலி டாக்டர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் இன்று வாணியம்பாடியை அடுத்த மல்லகுண்டா பகுதியில் டாக்டருக்கு படிக்காமல் மருத்துவமனை நடத்தி வந்த நறியனேரி கிராமத்தை சேர்ந்த மணி (வயது 50) என்ற போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் திம்மாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்