போலி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி செய்த போலி துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-17 20:20 GMT

மதுரை, 

மதுரை சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சண்முகதுரை (வயது 58). இவரது நண்பர் குணசேகரன். இவர், சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சண்முக துரை, தன்னை துணை போலீஸ் சூப்பிரண்டு என கூறி பலரிடம் அறிமுகமாகி உள்ளார்.

மேலும், அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பலரிடம் ரூ.15 லட்சத்தை பெற்றிருக்கிறார். ஆனால், அவர் கூறியதுபோல் யாருக்கும் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதற்கிடையே இவரிடம் பாதிக்கப்பட்ட திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பச்சைமலையான் கோட்டை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர், மதுரை வடக்கு போலீஸ் துணை கமிஷனர் பிரதீப்பிடம் புகார் அளித்தார். அந்த புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். போலீசார் நடத்திய விசாரணையில், டிப்டாப் உடையணிந்த சண்முகத்துரை தன்னை போலீஸ் அதிகாரி என கூறி, இதுபோல், பலரிடம் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட சண்முகதுரையை போலீசார் கைது செய்தனர். மோசடிக்கு உடந்தையாக இருந்த சண்முகதுரையின் மகள் அர்ச்சனா, தலைமை செயலகத்தில் பணிபுரியும் குணசேகரன் ஆகியோர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்