தனியார் இ-சேவை மையத்தில் போலி சான்றிதழ் தயாரிப்பு? வருவாய்த்துறையினர் விசாரணை

தனியார் இ-சேவை மையத்தில் போலி சான்றிதழ் தயாரித்தது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்;

Update: 2023-06-25 19:30 GMT

மேட்டூர்:-

சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள ஒரு தனியார் இ-சேவை மையத்தில் போலி சான்றிதழ்கள் தயாரித்து வருவதாக மேட்டூர் வருவாய் துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட இ-சேவை மையத்துக்கு சென்றனர்.

பின்னர் இ-சேவை மையத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அங்கிருந்த கணினி மற்றும் ஹார்டுடிஸ்குகளை பறிமுதல் செய்தனர். அதனை மேட்டூரில் உள்ள தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தகோரி மேட்டூர் போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'போலி சான்றிதழ் தயாரிப்பதாக புகார் வந்தது. அதன்பேரில் விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் முடிவில் தான் உண்மை நிலை தெரியவரும்' என்றார்கள். இந்த சம்பவம் மேட்டூரில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்