நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தம்

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-06-07 18:27 GMT

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலை நிறுத்தம்

தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்த போராட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சேகர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஜெய்சங்கர் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர்கள் அண்ணாமலை, செல்வகுமார், துணை தலைவர்கள் குபேந்திரன், அன்பரசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில் பொது வினியோகத் திட்டத்திற்கு என தனி துறை உருவாக்க வேண்டும். 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியும் சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். அனைத்து நியாயவிலை கடைகளுக்கு புதிய 4ஜி விற்பனை முனையம் மற்றும் 4ஜி சிம் கார்டு வழங்க வேண்டும்.

ஓய்வூதியம்

கண் விழித்திரை அடிப்படையில் விற்பனை செய்வதற்கு ஆவணம் செய்யப்பட வேண்டும். பழுதடைந்த விற்பனை முனையத்திற்கு பழுது நீக்கம் தொகை வசூல் செய்வதை கைவிட வேண்டும்.

சரியான எடையில் தரமான அனைத்து பொருட்களையும் பொட்டலமாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் நியாய விலைக்கடை பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆரணி வட்டத் தலைவர் தனபால் நன்றி கூறினார்.

இந்த வேலை நிறுத்த போராட்டம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை நடைபெற உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்