தொழிற்சாலைகள் உரிமத்தினை புதுப்பிக்கலாம்

தொழிற்சாலைகள் உரிமத்தினை புதுப்பிக்கலாம்

Update: 2023-10-17 12:36 GMT

திருப்பூர்

தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளும் 2024-ம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே புதுப்பித்து கொள்ள வேண்டும். உரிமத்தை புதுப்பிக்க வருகிற 31-ந் தேதியே கடைசி நாள். எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிற்சாலைகள் https://dish.tn.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக உாிமத்துக்கான உரிய தொகையை ஆன்லைன் மூலம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்பித்து புதுப்பிக்கப்பட்ட உரிமத்தை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை திருப்பூர் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இணை இயக்குனர்-2 தொிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்