கோஷ்டி மோதல்; 2 பேர் கைது

சங்கரன்கோவிலில் இருதரப்பினருக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-06-02 18:45 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 65). இவர் 4 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயத்தில் நாட்டாமையாக இருந்ததாக தெரிகிறது. அதற்கு முன்பு சுப்பையா என்பவர் நாட்டாமையாக இருந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் இருதரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது.

இதுதொடர்பாக குருசாமி அளித்த புகாரின் பேரில் சுப்பையா, அவரது மகன்கள் அந்தோணி ராஜ் (37), முத்துராஜ் (32), குமார் (44), பரமசிவன் மகன் செந்தில்குமார் ஆகியோர் மீதும், குமார் கொடுத்த புகாரின் பேரில் பரமசிவன் மகன் போத்திராஜ் (31), மாயழகு மகன் ராஜ் ஆகியோர் மீதும் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில் அந்தோணி ராஜ், போத்திராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்