விடுதியில் தங்கிய பெண்ணிடம் 16 பவுன் நகை, பணம் திருடிய பேஸ்புக் நண்பர்

முகநூல் மூலம் பழகி விடுதியில் தங்கிய போது பெண்ணிடம் 16 பவுன் நகை, பணத்தை திருடிய நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2023-08-04 20:11 GMT

முகநூல் மூலம் பழகி விடுதியில் தங்கிய போது பெண்ணிடம் 16 பவுன் நகை, பணத்தை திருடிய நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.

முகநூல் மூலம் பழகிய நண்பர்

மதுரை புதூர் பகுதியை சேர்ந்த 42 வயது பெண் கணவரை விவாகரத்து செய்து விட்டு மகனுடன் தந்தை வீட்டில் தற்போது வசித்து வருகிறார். இவருக்கு முகநூலில் (பேஸ்புக்) பலர் நண்பர்களாக உள்ளனர்.

அதில் கோவையை சேர்ந்த வசந்த் அறிமுகம் ஆனார். அவர்கள் இருவரும் முகநூல் மூலம் தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.

இந்த நிலையில் அவர் மதுரைக்கு வந்து அந்த பெண்ணை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். அவரும் மதுரைக்கு வருமாறு கூறியுள்ளார்.

நகை திருட்டு

பின்னர் அவர்கள் கே.கே.நகரில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது நதியா தான் அணிந்திருந்த 10 பவுன் தாலி சங்கிலி, 3 பவுன் நெக்லஸ், அரை பவுன் மோதிரம் 4, ஒரு பவுன் வளையல் ஒன்று, செல்போன்-2 மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை அங்குள்ள அறையில் வைத்து விட்டு குளிக்க சென்றார்.

அவர் திரும்பி வந்து பார்த்த போது வசந்த்தை காணவில்லை. மேலும் தான் கழற்றி வைத்திருந்த நகைகள், பணம், செல்போன்களும் அங்கு இல்லை. அதன் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ஆகும். அதனை வசந்த் திருடி சென்றிருக்கலாம் அந்த பெண் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது முகநூல் நண்பரை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்