துப்புரவு பணியாளர்களுக்கு கண் சிகிச்சை முகாம்

விருதுநகரில் துப்புரவு பணியாளர்களுக்கு கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

Update: 2022-07-30 19:09 GMT

விருதுநகர் நகராட்சி நிர்வாகம் சார்பில் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கான கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இந்நகர் நகராட்சி முஸ்லிம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமினை நகரசபை தலைவர் மாதவன், துணைத்தலைவர் தனலட்சுமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 120 துப்புரவு பணியாளர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 20 பணியாளர்களுக்கு இலவச கண் புரைநோய் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நகரசபை சுகாதாரத்துறையினர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்