கண் சிகிச்சை முகாம்

பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.

Update: 2023-06-18 21:15 GMT

பந்தலூர்

பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமுக்கு அரசு ஆஸ்பத்திரி டாக்டர் அகமது சாதிக் தலைமை தாங்கினார். நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம், ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், சுகாதார ஆய்வாளர் நிசார் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். டாக்டர் அந்தோணியம்மாள் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கண் அழுத்தம், துரும்புகள் அகற்றுதல் உள்ளிட்ட கண் பரிசோதனை ேமற்கொண்டு சிகிச்சை அளித்தனர்.

முகாமில் 198 பேர் சிகிச்சை பெற்றனர். அதில் 28 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்