கண் சிகிச்சை முகாம்

மானூர் அருகே வாகைகுளத்தில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.;

Update: 2023-06-02 19:45 GMT

மானூர்:

மானூர் அருகே வாகைக்குளத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் உக்கிரன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நெல்லை பார்வை இழப்பு தடுப்பு சங்கம் ஆகியோர் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது. பஞ்சாயத்து தலைவர் திருப்பதி முகாமை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் பிரியதர்ஷினி மற்றும் யூனியன் கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவர் ஆர்த்திபிரியதர்ஷினி, கண்புரை நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சைக்கு பரிந்துரை செய்தார். முகாமில் உக்கிரன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் குருநாதன், கண் மருத்துவ உதவியாளர் ராஜேஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் சுந்தரம், ஆனந்த், பகவதிராஜா, செவிலியர் தனலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்