கடையம்:
கடையம் அருகே உள்ள திருமலையப்பபுரத்தில் நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. திருமலையப்பபுரம் பஞ்சாயத்து தலைவர் மாரியப்பன், துணைத்தலைவர் சுரேஷ் மற்றும் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாரத ரத்னா விருது பெற்ற சோமசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் ஆகியோர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தனர். கடையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் குத்துவிளக்கேற்றினார். முகாமில் கலந்து கொண்டவர்களின் கண்களை பரிசோதனை செய்து கண்களில் குறைபாடு உள்ளவர்களுக்கு மருந்துகள் மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. கண் பரிசோதனையின் போது கண்களில் அதிக குறைபாடு உள்ளவர்களுக்கு இலவசமாக கண் அறுவை சிகிச்சை செய்ய நெல்லை அரவிந்த் கண் மருத்துவமணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. முகாமில் திருமலையப்பபுரம் சுற்று வட்டார பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.