கண் சிகிச்சை முகாம்

சேரன்மாதேவியில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.;

Update:2022-07-20 01:15 IST

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி நகர த.மு.மு.க. சார்பில், சேரன்மாதேவி பள்ளிவாசல் வளாகத்தில் இருதய நோய் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. த.மு.மு.க, தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை, அருணா கார்டியாக் கேர் மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு, சேரன்மாதேவி ‌ஒன்றிய தலைவர் சேக்‌முகைதீன் தலைமை தாங்கினார். துணை தலைவர் ஜாகீர் உசேன், துணை செயலாளர் சேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க. நெல்லை மாவட்ட தலைவர் ரசூல்மைதீன், ம.ம.க. மாவட்ட செயலாளர் ஜமால், மாவட்ட துணை தலைவர் மைதீன், மாவட்ட துணை செயலாளர்கள் ரசூல், நவாஸ்செரிப், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் யூசுப் சுல்தான், தொண்டர் அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன், ஊடக அணி மாவட்ட பொருளாளர் அப்பாஸ், சேரன்மாதேவி ஜமாஅத் தலைவர் அபுல்ஹசன், செயலாளர் செய்யது அலி, துணை செயலாளர் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களுக்கு தி ஐ பவுண்டேசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள், அருணா கார்டியாக் கேர் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள். முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முடிவில் சேரன்மாதேவி நகர த.மு.மு.க தலைவர் பாதுஷா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்