கண் சிகிச்சை முகாம்

மூலைக்கரைப்பட்டியில் கண் சிகிச்சை முகாம் நடந்தது.;

Update: 2023-07-16 19:47 GMT

சேரன்மாதேவி:

கோபாலசமுத்திரம் கிராம உதயம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், மூலைக்கரைபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. மூலைக்கரைபட்டி பேரூராட்சி தலைவர் பார்வதி மோகன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். கிராம உதயம் ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங் முன்னிலை வகித்தார். கிராம உதயம் இலவச மருத்துவ துறை பொறுப்பாளர் கணேசன் வரவேற்றார். ஆசிரியர் குமரேசன், அரவிந்த் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் மாதவன் ஆகியோர் பேசினர். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் லாவண்யா மற்றும் ஜீத் ஆகியோர் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்