கோர்ட்டில் கண் பரிசோதனை முகாம்
நெல்லை கோர்ட்டில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.
நெல்லை வக்கீல் சங்கம் சார்பில் கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல் சங்க கட்டிடத்தில் கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நெல்லை வக்கீல் சங்க தலைவர் ராஜேசுவரன் தலைமை தாங்கினார். செயலாளர் காமராஜ் முன்னிலை வகித்தார். முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் கண் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில் டாக்டர் அகர்வால் கண் ஆஸ்பத்திரி டாக்டர் அஞ்சனா தலைமையில் மருத்துவ பணியாளர்கள் வக்கீல்களுக்கு கண் பரிசோதனை செய்து, தேவையான ஆலோசனைகளை வழங்கினர். இதில் நீதிபதிகள், மூத்த வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் நெல்சன் ஜெபராஜ் நன்றி கூறினார்.