காவல் துறையை சேர்ந்தவர்களுக்கு கண் பரிசோதனை முகாம்

வேலூரில் காவல் துறையை சேர்ந்தவர்களுக்கு கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.;

Update: 2023-03-15 18:22 GMT

வேலூர் மாவட்ட காவலர் மன்றத்தில் காவல்துறையை சேர்ந்தவர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார்.

இந்த முகாமில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், ரஜினிகாந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்