அம்பை:
அம்பை தாலுகா சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து அம்பை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கண் பரிசோதனை முகாமை நடத்தியது. சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான செந்தில்குமார் தலைமை தாங்கினார். முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி செந்தில்குமார், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி குமார், குற்றவியல் நடுவர் பல்கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிராஸ்தார் சேக்முகைதீன் வரவேற்றார். அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர் காயத்ரி தலைமையிலான மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர்.
நிகழ்ச்சியில் அரசு வக்கீல்கள் மீனாட்சி நாதன், திருமலைகுமார், காந்திமதி நாதன், ராமராஜ் பாண்டியன், முன்னாள் அரசு வக்கீல்கள் ராஜேந்திரன், ராஜாங்கம், மூத்த வக்கீல்கள் ஆதிபாலகிருஷ்ணன், பிரதாபன், சிவசைலநாதன் உள்பட வக்கீல் சங்க நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.