சரவணம்பட்டி
கோவை சரவணம்பட்டி பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 40). சம்பவத்தன்று இவர், சரவணம்பட்டியில் இருந்து துடியலூர் செல்லும் சாலையில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் சுப்பிரமணியிடம் கத்தியை காட்டி மிரட்டி,அவரிடம் இருந்த ரூ.600-ஐ பறித்துக் கொண்டு தப்பி சென்றார்.
இது குறித்து சுப்பிரமணி சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர் கோவையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அபினேஷ் குமார் (29) என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் அபினேஷ் குமாரை கைது செய்தனர்.