கல்லூரி பேராசிரியையிடம் பணம் பறிப்பு

விருதுநகரில் கல்லூரி பேராசிரியையிடம் பணம் பறிக்கப்பட்டது.;

Update:2022-11-04 00:16 IST


விருதுநகர் என்.ஜி.ஓ.காலனி முல்லை தெருவை சேர்ந்தவர் யோகம் (வயது 42). இவர் விருதுநகரில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் தமிழ் துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் கல்லூரிக்கு அருகில் வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 30 வயது மதிக்கத்தக்க நபர் இவர் வைத்திருந்த கைப்பையை பறித்து விட்டு தப்பி சென்று விட்டார். அந்த கைப்பையில் ரூ.1000 இருந்தது.

இது பற்றிய புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

========

Tags:    

மேலும் செய்திகள்