நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு
நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
அண்ணாமலை நகர்,
சிதம்பரம் அண்ணாமலை நகர் கோவிந்தசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி (வயது 40). இவர் நேற்று காலை அண்ணாமலை நகர் முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் முரளியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூ.500-யை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முரளியிடம் பணம் பறித்தது அண்ணாமலை நகர் வடக்கிருப்பு பகுதியை சேர்ந்த தேவா (28), சிதம்பரநாதன் பேட்டை பகுதியை சேர்ந்த விஜயகுமார் (25), கொக்கிகுமார், விக்னேஸ்வரன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து தேவா, விஜயகுமார் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கொக்கிகுமார், விக்னேஸ்வரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.