வாலிபரிடம் நகை, பணம் பறிப்பு

வாலிபரிடம் நகை, பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-31 18:45 GMT

தேவகோட்டை, 

திருவாடானை அருகே உள்ள ஆயிரவேலி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி (வயது 32). சம்பவத்தன்று இவர், தேவகோட்டை அருகே உள்ள மணி கரம்பை கிராமத்தை சேர்ந்த சரத்குமாரை (30) ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதையொட்டி தேவகோட்டை பஸ் நிலையத்தில் இருந்து பாண்டியை மோட்டார்சைக்கிளில் சரத்குமார் அழைத்து சென்று முள்ளிக்குண்டு அருகே மது குடித்தனர். பின்னர் கண்மாய் பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு வந்த சரத்குமாரின் அண்ணன் சதீஷ்குமார், அவரது நண்பர் ஆகிய 3 பேரும் சேர்ந்து பாண்டியை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் செயின், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.250 ஆகியவற்றை பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் பாண்டி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து சரத்குமாரை கைது செய்தார். சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பரை தேடிவருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்