சின்னசேலத்தில் பெண்ணிடம் ரூ.64 ஆயிரம் பறிப்பு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

சின்னசேலத்தில் பெண்ணிடம் ரூ.64 ஆயிரத்தை பறித்த மர்ம நபர்களை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.;

Update:2022-10-15 00:15 IST


சின்னசேலம், 

சின்னசேலம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 62). இவர் நேற்று காலை சின்னசேலத்தில் சேலம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று, தனது கணக்கிலிருந்து ரூ, 64 ஆயிரம் பணத்தை எடுத்துள்ளார். அந்த பணத்தை ஒரு துணி கைப்பையில் வைத்து கொண்டு தனது வீட்டிற்கு மெயின் ரோடு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், மகேஸ்வரியின் கையில் இருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்