கட்டுமான நிறுவன ஊழியரிடம் நகை, பணம் பறிப்பு

கட்டுமான நிறுவன ஊழியரிடம் நகை, பணத்தை பறித்து சென்றனர்.;

Update: 2023-04-02 21:00 GMT


மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையை சேர்ந்தவர் சாமுவேல்ராஜ் (வயது 30). இவர் விருதுநகரில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று மாத சம்பளத்தை பெற்றுக்கொண்டு போக்குவரத்து கழக பணிமனை அருகே உள்ள ஒரு பெட்டி கடைக்கு சென்றார். அப்போது அங்குநின்று கொண்டிருந்த 3 பேர் சாமுவேல் ராஜை அருகில் உள்ள ஒரு சல்லடை தயாரிக்கும் நிறுவன பகுதிக்கு உடன் மது அருந்துவது போல் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் அங்கு சாமுவேல் ராஜை தாக்கியதுடன் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 1 பவுன் தங்க சங்கிலி லேப்டாப் மற்றும் ரூ.33 ஆயிரத்தை பறித்துச் சென்றுவிட்டனர். இதுபற்றி சாமுவேல் ராஜ் கொடுத்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்